மதுரையில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் மாண்புமிகு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன்.

Published Date: April 17, 2024

CATEGORY: CONSTITUENCY

பணம் கொடுக்காமல் ஜெயித்த  அமைச்சர் பி.டி.ஆர்.

தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததற்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழகம் தான்.அதற்கு முன்னதாக பணமாக இல்லாமல் சிறிய பரிசு பொருட்களாக இரவோடு இரவாக விநியோகித்த காலம் தான் வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் போட்ட பிள்ளையார் சுழி.

எம்.ஜி.ஆர். சட்டசபை தேர்தலை எதிர்கொண்ட போது அ.தி.மு.க சார்பில் திருச்சி 1-வது தொகுதியில் போட்டியிட்டவர் முசிறி பித்தன். எம்.ஜி.ஆரின் தீவிர விசிறியான இவர் தேர்தல் நாள் நெருங்குவதற்கு சில நாட்கள் முன்பு காந்தி மார்க்கெட்டை சுற்றி உள்ள பகுதிகளில் இரவோடு இரவாக எவர்சில்வர் பாத்திரங்கள் வழங்கியதாக கூறுவதுண்டு. இதை போல் தமிழகம் முழுவதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இந்த இலவச அன்பளிப்புகளும் பின்னாளில் ஓட்டுக்கு பணம் என பிரதான அவதாரமாக மாறியது மதுரை, திருமங்கலம் இடைத்தேர்தலில் தான்.

ஆளுங்கட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.கவிற்கும், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவிற்கான உச்சகட்ட அரசியல் மோதலாக இத்தேர்தல் அமைந்தது. தி.மு.கவின் தென் தமிழகத்தின் தளபதியாக இருந்த மு.க.அழகிரி இத்தேர்தலை உச்சக்கட்ட சர்ச்சைக்குரிய தேர்தலாக்கினார். கட்சி பாகுபாடின்றி வீட்டுக்கு வீடு மிரட்டி பூட்டிருந்த வீடுகளில் சுவறுகளில் பணத்தைப் போட்டு சென்றது. பணம் வாங்கிவிட்டு வேறு கட்சிக்கு ஓட்டு போட்டால் இ.வி.எம் மெஷினில் கண்டுபிடித்து விடுவோம் என பெண் வாக்காளர்களை மிரட்டாமல் மிரட்டி ஓட்டு போட வரவழைத்து என பல்வேறு காட்சிகள் அரங்கேறியதால் இந்த இடைத்தேர்தல் திருமங்கலம் பார்முலா தேர்தல் என்றே பிரபலமானது. 

அதற்குப் பிறகு தமிழகத்தில் நடந்த தேர்தல்கள் ஓட்டுக்கும் பணம் இல்லாமல் நடக்கவில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. ஆரம்பத்தில் பொது மற்றும் மாற்றுக் கட்சிக்காரர்களை குறிவைத்து நடந்த பட்டுவாடா இன்று சொந்தக்காரர்களை கட்சிக்குள் தக்க வைத்துக் கொள்ள அவர்களுக்கும் சேர்த்து பணம் கொடுக்கும் நிலைக்கு அரசியல் கட்சிகளால் தள்ளப்பட்டுள்ளன. நாம் ஏதேனும் வேண்டுகோள் வைத்தால் பணம் வாங்கிக் கொண்டு தானே செய்கிறார்கள். ஆதலால் நாமும் ஓட்டுக்கு பணம் வாங்குவதிலும் தவறில்லை என நியாயப்படுத்தி கொள்ளும் அளவிற்கு வாக்காளர்களும் மாற்றியுள்ளது தான் வேடிக்கை.

எந்த மதுரையில் ஓட்டுக்கு பணம் கொடுத்து பிரபல மாக்கியதோ அதே மதுரையில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் மதுரையின் பாரம்பரிய குடும்பங்களாக வழிவந்த இவர் தற்போதைய தி.மு.க அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாடல், யார் கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது.நான் அரசியலுக்கு வந்த போது ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். என் கொள்ளு பாட்டன், பாட்டன், தந்தை ஆகியோரின் தொடர் அரசியல் மக்கள் பணி நின்றுவிடக்கூடாது என்பதற்காக அரசியலுக்கு வந்தேன் நான். நான் பணம் கொடுக்க ஆரம்பித்து விட்டால் நீ விலைக்கு வாங்க வந்தியா என்ற கேள்வி வரும். கொள்கை, தத்துவ அடிப்படையில் வெற்றி தோல்வி எல்லாம் நம் கையில் இல்லை ஆனால் எப்படி செயல்படுகிறோம் என்பது நம் கையில் உள்ளது. அதனால் நான் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று 2016-ல் சொன்னேன். இது தத்துவ அடிப்படையில் நான் எடுத்த முடிவு. இந்த முடிவால் சில நன்மைகளும் எனக்கு கிடைத்தது. கொடுத்து விட்டால் ஜெயித்து விடுவோம் அதனால் மற்ற வேலைகள் செய்ய வேண்டாம் என்று தொண்டர்கள்,நிர்வாகிகள் இடம் இருந்த நம்பிக்கை விலகியது. உழைத்து தான் ஜெயிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.பணம் கொடுப்பது என்பது ஒரு சிறிய விஷயம் இல்லை. அந்தப் பெரிய முயற்சியை செய்யாததால் பல மணி நேரம் பல நூற்று நபர்களை ஈடுபடுத்தால் மக்கள்களை இன்னும் நெருக்கமாக தொடர்பு கொண்டு பிரச்சாரம் செய்ய முடிந்தது. இதனால் 2016ல் திணறி திணறி சுமார் 5000 போட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றேன்.

ஆனால் ஐந்து வருஷம் ஒரு எம்.எல்.ஏ எப்படி செயல்பட வேண்டும் என கார்ப்பரேட் ஸ்டைலில் திட்டமிட்டு மக்கள் எளிதாக தொடர்பு கொள்ளும் புகார் பெட்டி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி அவர்களது குறைகளை தீர்த்து கொடுத்தேன்.தெருவாரியாக விவரங்களை தெரிந்து வைத்தேன். இரண்டாவது முறை போட்டியிடும்போது முதல் முறை போன்று அதிர்ஷ்டத்தில் வெற்றி பெற முடியாது என்று கட்சியினரே கூறினர். முதல் தேர்தலில் நான் பணம் கொடுப்பதை தடுக்க முயன்ற போது நீங்கள் கொடுக்காவிட்டாலும் மற்றவர்கள் கொடுப்பதை தடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர். 2021 வது தேர்தலில் நான் கொடுக்காததால் எதிர்தரப்பு வேட்பாளரும் கொடுக்கவில்லை என்று கூறிவிட்டார். ஆதலால் ஓட்டுப்பதிவு குறையுமே என்ற அச்சமும் இருந்தது. ஆனால் அதே அளவு ஓட்டு பதிவாகி 34 ஆயிரம் போட்டியில் வெற்றியும் பெற்றேன். இது பணியின் விளைவு என்று தான் நினைக்கிறேன். 2 தேர்தலில் பணம் கொடுக்க விட்டாலும் ஜெயிக்க முடியும் நிரூபித்துவிட்டதால், பணம் கொடுக்காமல் ஜெயிக்க முடியும் என்று நிரூபித்து விட்டோம். அது நல்லது என்றார்

Media: Hindu Tamil